தேசிய செய்திகள்

மும்பையில் கொரோனா பாதிப்புக்கு உயிரிழப்பு எண்ணிக்கை 4,282 ஆக உயர்வு

மும்பையில் கொரோனா பாதிப்புக்கு 41 பேர் இன்று உயிரிழந்து உள்ளனர்.

தினத்தந்தி

மும்பை,

நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகளும் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில், மராட்டியம் முதல் இடத்திலும், டெல்லி அடுத்த இடத்திலும் உள்ளன. 3வது இடத்தில் தமிழகம் உள்ளது.

மராட்டியத்தில் மும்பை பெருநகரம் அதிக பாதிப்புகளை சந்தித்து வருகிறது. இதுபற்றி மும்பை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தியில், மராட்டியத்தின் மும்பை நகரில் கொரோனா பாதிப்புக்கு இன்று ஒரே நாளில் 41 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 4,282 ஆக உயர்ந்து உள்ளது.

இதேபோன்று, 1,460 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதியானது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 73,747 ஆக உயர்ந்து உள்ளது. இதுவரை 27,134 பேர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்