போபால்,
மத்திய பிரதேசத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருகிறது. மாநில முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகானுக்கு தொற்று உறுதியானதால், அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று மீண்டார். அதேபோல் பொதுப்பணித்துறை மந்திரி கோபால் பர்கவா, மாநில மருத்துவ கல்வி துறை மந்திரி விஷ்வாஸ் சரண், கூட்டுறவுத்துறை மந்திரி அரவிந்த் படோரியா, நீர்வளத்துறை மந்திரி துளசிராம் சிலவார், உயர் கல்வித்துறை மந்திரி மோகன் யாதவ் மற்றும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை மந்திரி ராம்கேலாவான் படேல் ஆகிய 6 மந்திரிகளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் ஏழாவதாக சுகாதாரத்துறை மந்திரி பிரபுராம் சவுத்திரிக்கு தொற்று இருப்பது நேற்று உறுதியானது. இதனை தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ள மந்திரி, தன்னுடன் தொடர்புடையவர்கள் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.