தேசிய செய்திகள்

கொரோனா கட்டுப்பாடுகளால், தடுப்பூசி போடும் பணி பாதிக்கக்கூடாது - மாநில அரசுகளுக்கு,மத்திய அரசு அறிவுறுத்தல்

கொரோனா கட்டுப்பாடுகளால், தடுப்பூசி போடும் பணி பாதிக்கக்கூடாது என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை மக்களை உலுக்கி எடுத்து வருகிறது. முதல் அலையை விட ஆக்ரோஷமாக சுழன்றடிக்கும் இந்த 2-வது அலையால் அரசும், மருத்துவத்துறையும் செய்வதறியாமல் திணறி வருகின்றன. கொரோனாவின் 2 அலை அதிகரித்து வரும் காரணமாக நாடு முழுவதும் தடுப்பூசி போடும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தடுப்பூசி செலுத்த வருகிறவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

இந்நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால், தடுப்பூசி போடும் பணி பாதிக்கக்கூடாது என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. மேலும் தடுப்பூசி மையங்களுக்கு சென்று ஊசி போடுவதில் எந்த இடையூறும் இருக்கக்கூடாது என்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது