தேசிய செய்திகள்

கொரோனா பாதிப்பு; மராட்டியத்தில் பலி எண்ணிக்கை 1,695 ஆக உயர்வு

நாட்டிலேயே கொரோனா பாதிப்புக்கு மிக அதிகளவாக மராட்டியத்தில் 1,695 பேர் பலியாகி உள்ளனர்.

புனே,

அமெரிக்கா உள்பட உலக நாடுகளில் பெரும் அச்சுறுத்தலாக உள்ள கொரோனா வைரஸ் இந்தியாவில் தீவிர பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது. நாட்டில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால், கொரோனா பரவல் அதிகளவில் குறைக்கப்பட்டு உள்ளது என நிபுணர்கள் கூறுகின்றனர். எனினும், பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

நாட்டில் அதிக அளவாக மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. கடந்த 1ந்தேதி 10,498 பேருக்கு பாதிப்பு உறுதியானது. கடந்த 3 வாரங்களில் இந்த எண்ணிக்கை 5 மடங்காக உயர்ந்து 52 ஆயிரத்து 667 ஆக உள்ளது.

இதேபோன்று, கடந்த 1ந்தேதி 459 ஆக இருந்த பலி எண்ணிக்கை இன்று 1,695 ஆக உயர்ந்துள்ளது. 15 ஆயிரத்து 786 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகள் (33 பேர்) மற்றும் மிசோரம் (ஒருவர்) ஆகியவை கொரோனா பாதிப்பில் இருந்து முழுவதும் மீண்டுள்ளன.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்