தேசிய செய்திகள்

கர்நாடகத்தில் கொரோனா இறப்பு விகிதம் ஒரு சதவீதமாக உள்ளது - மந்திரி சுதாகர் தகவல்

கர்நாடகத்தில் கொரோனா இறப்பு விகிதம் ஒரு சதவீதமாக உள்ளது என்று மந்திரி சுதாகர் தகவல் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் கொரோனா 3-வது அலை குறைய தொடங்கியுள்ளது. இந்த அலையில் கொரோனா பரவல் அதிகமாக இருந்தாலும், உயிரிழப்பு மற்றும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளது. மாநிலத்தில் ஒமைக்ரான் பரவலே ஆதிக்கம் செலுத்துகிறது.

இது குறித்து சுகாதாரத்துறை மந்திரி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் காங்கிரஸ் தலைவர்கள் கொரோனா உயிரிழப்புகள் விஷயத்தில் உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிட்டுள்ளனர். கொரோனா 3-வது அலையில் இறப்புகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.

அதாவது கொரோனா இறப்பு விகிதம் 1 சதவீதமாக உள்ளது. அதாவது 100 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் அதில் ஒருவர் மட்டுமே உயிரிழக்கிறார். மொத்தம் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையில் 1.59 சதவீதம் பேர் மட்டுமே ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சை பெறுகிறார்கள்.

இவ்வாறு சுதாகர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு