தேசிய செய்திகள்

கர்நாடகாவில் 29 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு; விடுதிக்கு சீல்

கர்நாடகாவில் தனியார் நர்சிங் பள்ளியை சேர்ந்த 29 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் விடுதி மூடப்பட்டு உள்ளது.

சிவமொக்கா,

கர்நாடகாவில் கொரோனா பாதிப்புகளுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 7,012 ஆக உள்ளது. நாட்டில் முதன்முறையாக கர்நாடகாவில் 2 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது இந்த வாரம் கண்டறியப்பட்டது.

இந்த நிலையில், கர்நாடகாவின் சிவமொக்கா நகரில் அமைந்துள்ள தனியார் நர்சிங் பள்ளியை சேர்ந்த 29 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. இதனை துணை ஆணையாளர் சிவகுமார் உறுதி செய்துள்ளார்.

அந்த மாணவர்களில் பலருக்கு தொற்று பாதிப்புக்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. அவர்களில் பலர் வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து மாணவர்கள் தங்கியுள்ள விடுதியை அதிகாரிகள் சீல் வைத்து மூடியுள்ளனர்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்