தேசிய செய்திகள்

ஆப்கானிஸ்தானில் இருந்து வந்தவர்களில் 10 பேருக்கு கொரோனா

ஆப்கானிஸ்தானில் இருந்து விமானத்தில் அழைத்து வரப்பட்டவர்களில் 10 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றியதையடுத்து அங்கிருந்து இருந்த தங்கள் நாட்டு மக்களை அமெரிக்கா, இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் மீட்டு வருகின்றன. மேலும் ஆப்கானிஸ்தான் மக்களையும் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தங்கள் நாட்டுக்கு அழைத்துச் செல்கின்றன.

அந்த வகையில் ஆப்கானிஸ்தானில் இருந்து நேற்று 78 பேர் டெல்லி அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கு இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர்களுக்கு மருத்துவ வசதிகளை செய்து கொடுக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்