தேசிய செய்திகள்

மேற்கு வங்கத்தில் இன்று 695 பேருக்கு கொரோனா; 749 பேர் டிஸ்சார்ஜ்

மேற்கு வங்கத்தில் தற்போது 8,734 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தா,

மேற்கு வங்க மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அங்கு கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 695 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மேற்கு வங்கத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,49,978 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 13 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததையடுத்து, அங்கு கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18,472 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் இன்று ஒரே நாளில் 749 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

இதன் மூலம் மேற்கு வங்கத்தில் இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 15,22,772 ஆக அதிகரித்துள்ளது. தற்போது அங்கு 8,734 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக மேற்கு வங்க மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.