தேசிய செய்திகள்

அசாமில் நேற்று 755 பேருக்கு கொரோனா; 969 பேர் டிஸ்சார்ஜ்

அசாமில் தற்போது 8,429 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திஸ்பூர்,

அசாம் மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அங்கு கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 755 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அசாமில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,79,488 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 11 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததையடுத்து, அங்கு கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,482 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் இன்று ஒரே நாளில் 969 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

இதன் மூலம் அசாமில் இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5,64,230 ஆக அதிகரித்துள்ளது. தற்போது அங்கு 8,429 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக அசாம் மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.