கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

கர்நாடகா, டெல்லியில் கொரோனா பாதிப்பு இன்றைய நிலவரம்

கர்நாடகா, டெல்லியில் கொரோனா பாதிப்பு இன்றைய நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

கர்நாடகா, டெல்லி மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தோர், குணமடைந்தவர்களின் இன்றைய நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி கர்நாடக மாநிலத்தில் இன்று புதிதாக 430 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கர்நாடகத்தில் இதுவரை மொத்தம் 9,44,057 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பால் மேலும் 7 பேர் பலியாகினர். இதன்மூலம் பலியானோர் எண்ணிக்கை 12,251 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 340 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், இதுவரை 9,25,829 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்புக்கு தற்போது 5,958 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

டெல்லி மாநிலத்தில் இன்று புதிதாக 142 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 6,36,529 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பால் 2 பேர் பலியாகினர். இதன்மூலம் பலியானோர் எண்ணிக்கை 10,886 ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 135 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில் இதுவரை 6,24,592 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்புக்கு தற்போது 1,051 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை