தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு; கடந்த 24 மணிநேரத்தில் 287 பேர் பலி

இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு கடந்த 24 மணிநேரத்தில் 287 பேர் பலியாகி உள்ளனர்.

புதுடெல்லி,

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு எதிரொலியாக ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிர முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 46 ஆயிரத்து 268 ஆக இன்று உயர்வடைந்து உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 9,971 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதேபோன்று கடந்த 24 மணிநேரத்தில், இதுவரை இல்லாத வகையில் 287 பேர் பலியாகி உள்ளனர்.

இதனால் பலி எண்ணிக்கை 6,642ல் இருந்து 6,929 ஆக உயர்ந்து உள்ளது. இதுவரை சிகிச்சை பெற்று குணமடைந்தோர் எண்ணிக்கை 1,14,073ல் இருந்து 1,19,293 ஆக உயர்ந்து உள்ளது. 1,20,406 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை