தேசிய செய்திகள்

மராட்டிய மாநிலத்தில் இன்று 5,363 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மராட்டிய மாநிலத்தில் இன்று 5,363 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

மும்பை,

மராட்டிய மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அங்கு இன்று புதிதாக 5,363 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 16,54,028 ஆக அதிகரித்துள்ளது. மராட்டிய தலைநகர் மும்பையில் மட்டும் இன்று 801 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மராட்டிய மாநிலத்தில் 115 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 43,463 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 7,836 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் 1,31,544 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை 14,78,496 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்