தேசிய செய்திகள்

கர்நாடக முதல் மந்திரியை சமீபத்தில் தொடர்பு கொண்ட எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா தொற்று உறுதி

கர்நாடகாவில் முதல் மந்திரி எடியூரப்பாவை சமீபத்தில் தொடர்பு கொண்ட எம்.எல்.ஏ. ஹரீஷ் பூஞ்சாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தினத்தந்தி

பெங்களூரு,

கர்நாடகாவின் பெல்தங்காடி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ஹரீஷ் பூஞ்சா. இவருக்கு லேசான காய்ச்சல் இருந்துள்ளது. இதனால் அவர் நேற்று கொரோனா பரிசோதனை செய்துள்ளார்.

இந்நிலையில், அதன் முடிவுகள் இன்று வெளிவந்தன. இதில், பூஞ்சாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுபற்றி டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், எனக்கு வேறு எந்த அறிகுறிகளும் இல்லை. அதனால், வீட்டில் இருந்தபடியே நான் சிகிச்சை பெற்று வருகிறேன் என தெரிவித்து உள்ளார். சமீபத்தில் பெங்களூருவில் முதல் மந்திரி எடியூரப்பாவை பூஞ்சா தொடர்பு கொண்டுள்ளார்.

கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பாவின் காவேரி இல்லத்தில் பணியாற்றும் சமையல் கலைஞர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, எடியூரப்பாவுக்கும், அவரது மகளுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது கடந்த 2ந்தேதி இரவில் உறுதியானது. இதையடுத்து முதல்-மந்திரி எடியூரப்பா எச்.ஏ.எல். விமான நிலைய ரோட்டில் உள்ள மணிப்பால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதேபோன்று, கர்நாடக முன்னாள் முதல் மந்திரி சித்தராமையாவுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் அவர் சிகிச்சைக்காக மணிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை