ஐதராபாத்,
ஆந்திர மாநில கவர்னர் விஸ்வ பூஷன் ஹரிசந்தன், ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் இன்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். டெல்லியில் இருந்து திரும்பியதில் இருந்து அவர் சளி, இருமலால் அவதிப்பட்டார்.
அதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விஜயவாடா ஆஸ்பத்திரி ஒன்றில் அவருக்கு ஆர்டி-பிசிஆர் கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது. அவருக்கு லேசான கொரோனா அறிகுறிகள் தென்பட்டதால், தனி விமானம் மூலம் ஐதராபாத்துக்கு அழைத்து செல்லப்பட்டு அங்குள்ளஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.