புதுச்சேரி,
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், புதுச்சேரியில் நேற்று ஒரே நாளில் 30 பேருக்கு பாதிப்பு உறுதியானது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 534 ஆக உயர்ந்து உள்ளது.
கொரோனா பரிசோதனை நேற்று 590 பேருக்கு மேற்கொள்ளப்பட்டது. இதில், புதிதாக புதுச்சேரியில் 27 பேருக்கும், காரைக்காலில் 3 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களை சேர்த்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 534 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 16 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்த நிலையில், புதுச்சேரியில் முதல் அமைச்சர் அலுவலகத்தில் பணியாற்றிய ஊழியர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதனால், அலுவலகத்தில் அவருடன் பணியாற்றியவர்களை தனிமைப்படுத்தி கொள்ள கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது. இந்த நிலையில், இதுபற்றி முதல் அமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் இன்று கூறும்பொழுது, அலுவலக ஊழியர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதனால், அடுத்த 2 நாட்களுக்கு முதல் அமைச்சர் அலுவலகம் மூடப்படுகிறது என கூறினார்.