தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 18,601 ஆக உயர்வு

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 18,601 ஆக உயர்வடைந்து உள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுபற்றி மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்ட புள்ளிவிவரத்தில், கொரோனா வைரசால் பலியானவர்களின் எண்ணிக்கை 543 ஆக அதிகரித்து உள்ளது. இதுவரை 2,547 பேர் குணமடைந்தும், 14,175 பேர் தொடர் சிகிச்சையிலும் உள்ளனர் என தெரிவித்து உள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17,265 ஆக உயர்வடைந்து இருந்தது.

இந்நிலையில், கொரோனா பாதிப்பு பற்றி மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், கொரோனா வைரசால் பலியானவர்களின் எண்ணிக்கை 590 ஆக அதிகரித்து உள்ளது. இதுவரை 3,251 பேர் குணமடைந்தும், 14,759 பேர் தொடர் சிகிச்சையிலும் உள்ளனர் என தெரிவித்து உள்ளது.

இதனால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 18,601 ஆக உயர்வடைந்து உள்ளது. நாட்டில் அதிக அளவாக மராட்டியத்தில் 4,666 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதுவரை 232 பேர் பலியாகி உள்ளனர். 572 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்