தேசிய செய்திகள்

இந்திய அரசு இன்று நடத்தும் கொரோனா மேலாண்மை மாநாடு - 9 நாடுகளுக்கு அழைப்பு

கொரோனா நோய்த்தொற்று மேலாண்மை தொடர்பான பிராந்திய மாநாட்டை இந்திய அரசு இன்று நடத்துகிறது.

தினத்தந்தி

புதுடெல்லி,

கொரோனா மேலாண்மை, அனுபவம், நல்ல நடைமுறைகள், முன்னோக்கிய பாதை என்ற தலைப்பிலான இம்மாநாட்டுக்கு, தெற்காசிய பகுதியைச் சேர்ந்த ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், பூடான், மாலத்தீவு, நேபாளம், பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், மொரீஷியஸ், செஷல்ஸ் ஆகிய நாடுகளும் அழைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தியாவின் சுகாதார செயலாளர் தலைமை வகிக்கும் இந்த மாநாட்டுக்கு, ஒவ்வொரு நாட்டில் இருந்தும் அதன் சுகாதார செயலாளர் மற்றும் கொரோனா மேலாண்மை தொழில்நுட்பக் குழுத் தலைவர் என தலா இருவர் அழைக்கப்பட்டுள்ளனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை