தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் மேலும் குறைந்தது

இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் மேலும் குறைந்தது.

தினத்தந்தி

புதுடெல்லி,

உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 3-வது இடத்தில் தொடருகிறது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 லட்சத்தை கடந்துள்ளது. பாதிப்பு அதிகமாக இருந்தாலும், பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்பு இந்தியாவில் குறைவாகவே உள்ளது.

கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வரும் நிலையில், நோய்த்தொற்றினை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, தனிமைப்படுத்தி, சிகிச்சை அளிக்கும் பணியில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இதனால் நோயில் இருந்து குணமடைந்து வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கையும் வேகமாக உயர்ந்து வருகிறது. கடந்த 4 நாட்களாக தினந்தோறும் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்த நோயில் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர். ஒட்டுமொத்தமாக எடுத்துக்கொண்டால், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்தை கடந்துள்ளது.

கொரோனா விவகாரத்தில் மத்திய, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் கவனத்துடன் நடவடிக்கைகளை எடுத்து வருவதால், இந்த நோயால் இறப்பவர்களின் விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் 2.31 சதவீதமாக இருந்த கொரோனா இறப்பு விகிதம் தற்போது 2.28 சதவீதமாக குறைந்து உள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது