தேசிய செய்திகள்

கொரோனா: கோவாவில் ஜனவரி 26 வரை பள்ளி, கல்லூரிகளை மூட உத்தரவு

கொரோனா பாதிப்பு எதிரொலியாக கோவாவில் வருகிற ஜனவரி 26ந்தேதி வரை அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளையும் மூடும்படி அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

தினத்தந்தி

பனாஜி,

நாட்டில் கொரோனா பாதிப்புகள் சமீப நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதேபோன்று ஒமைக்ரான் பரவலும் ஏற்பட்டு உள்ளது. இதனை முன்னிட்டு மத்திய மற்றும் மாநில அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இவற்றில் டெல்லி, மராட்டியம் அதிக அளவிலான ஒமைக்ரான் பாதிப்புகளை கொண்டுள்ளன. இதனை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் இரவு ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இதேபோன்று, ஒமைக்ரான் மற்றும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கோவாவில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த வகையில், கோவா மாநில அரசு பள்ளிகளை மூடவும் உத்தரவிட்டு உள்ளது.

கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு, கோவாவில் வருகிற ஜனவரி 26ந்தேதி வரை அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளையும் மூடும்படி அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு