தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பு; கூடுதல் டோஸ், குழந்தைகளுக்கு தடுப்பூசி பற்றி நாளை ஆலோசனை

கொரோனா தடுப்புக்கான கூடுதல் டோஸ் மற்றும் குழந்தைகளுக்கான தடுப்பூசி போடுவது பற்றி நாளை ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்தியாவில் இதுவரை 3.46 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. 4.6 லட்சம் பேர் கொரோனாவுக்கு உயிரிழந்து உள்ளனர். இது மொத்த எண்ணிக்கையில் 1.36% ஆகும். நாடு முழுவதும் கடந்த ஜனவரி முதல் கொரோனா தடுப்பூசிகள் போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா புதிய வகை ஒமைக்ரான் பாதிப்புகள் பற்றி மக்களவையில் பேசும்போது, குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி அல்லது பூஸ்டர் டோஸ்கள் போடுவது ஆகியவை அரசு அமைக்கும் நிபுணர்கள் அடங்கிய 2 குழுக்களின் அறிவுரையின்படியே முடிவு எடுக்கப்படும் என கூறினார்.

இந்த நிலையில், நோயெதிர்ப்பு சக்திக்கான தேசிய தொழில்நுட்ப அறிவுறுத்தல் குழுவின் செயற்குழு கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கொரோனா தடுப்புக்கான கூடுதல் டோஸ் மற்றும் குழந்தைகளுக்கான தடுப்பூசி போடுவது பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?