திருவனந்தபுரம்,
கேரள மாநிலத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் அங்கு கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக கேரள சுகாதாரத்துறை கொரோனா பரிசோதனைகளை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த கேரள மாநில அரசுக்கு உதவும் வகையில் தேசிய நோய்த் தடுப்பு மையத்தின் இயக்குநர் எஸ்.கே. சிங் தலைமையிலான மத்தியக் குழு கேரளாவிற்கு செல்ல உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பின்படி அந்தக் குழு வெள்ளிக்கிழமை(நாளை) கேரளா சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவை எதிர்கொள்வதில் மாநில பொது சுகாதாரத்துறையின் நடவடிக்கைகளை ஆய்வு செய்து, அதுசார்ந்த நடவடிக்கைகளில் மாநில சுகாதாரத்துறைக்கு இந்தக் குழு உதவவுள்ளதாகத் மத்திய அரசு தெரிவித்துள்ளது.