தேசிய செய்திகள்

பிரதமர் மோடி அரசின் 7-ம் ஆண்டு நிறைவையொட்டி 1 லட்சம் கிராமங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கை: பா.ஜனதா திட்டம்

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா ஆட்சிக்கு வந்து வருகிற 30-ந் தேதி 7 ஆண்டுகள் நிறைவடைகிறது. கொரோனா பரவல் காரணமாக இந்த விழாவை கொண்டாட வேண்டாம் என கட்சியினருக்கு பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவுறுத்தி இருந்தார்.

தினத்தந்தி

ஆனால் இந்த 7 ஆண்டு நிறைவையொட்டி கிராமங்களில் கொரோனா தடுப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட கட்சி திட்டமிட்டுள்ளது. அதன்படி நாடு முழுவதும் 1 லட்சம் கிராமங்களில் இந்த பணிகளை கட்சியினர் மேற்கொள்வார்கள் என பா.ஜனதா பொதுச்செயலாளர் தருண் சுக் தெரிவித்தார்.மக்களுக்கு முக கவசம், சானிடைசர் மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்குதல், ஏழை மற்றும் தேவையில் இருப்போருக்கு ரேஷன் பொருட்கள் வழங்குதல், கொரோனா மற்றும் தடுப்பூசி விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்தல், ரத்த தான முகாம்கள் நடத்துதல் போன்ற பணிகளில் பா.ஜனதா தொண்டர்கள் ஈடுபடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த கொரோனா தடுப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் கட்சியின் ஒவ்வொரு எம்.பி., எம்.எல்.ஏ.க்களும் குறைந்தபட்சம் 2 கிராமங்களிலாவது பங்கேற்பார்கள் எனவும் தருண் சுக் தெரிவித்தார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்