தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்; விப்ரோ குழுமம் ரூ.1,125 கோடி நிதியுதவி

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக விப்ரோ குழுமம் ரூ.1,125 கோடி நிதியுதவி வழங்குகிறது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனை தொடர்ந்து கடந்த மாதம் 24ந்தேதி நள்ளிரவு முதல் அடுத்த 21 நாட்களுக்கு மத்திய அரசால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கொரோனா பரவுவதை தடுக்க நாடு முழுவதும் வருகிற ஏப்ரல் 14ந்தேதி வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும்.

இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்டு உள்ள செய்தியில், 49 வெளிநாட்டினர் உள்பட மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,251 ஆகவும், சிகிச்சை முடிந்து சென்றவர்களின் எண்ணிக்கை 102 ஆகவும், பலி எண்ணிக்கை 32 ஆகவும் உள்ளது என தெரிவித்திருந்தது. வைரஸ் பாதித்தோரின் எண்ணிக்கை இன்று 1,637 ஆக உயர்ந்து உள்ளது. 132 பேர் சிகிச்சை முடிந்து திரும்பியுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலால் முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் ஏற்பட்ட சுகாதார பாதிப்பு மற்றும் மனிதஇனத்திற்கு ஏற்பட்ட நெருக்கடி ஆகியவற்றை எதிர்கொள்ள, விப்ரோ நிறுவனம், விப்ரோ என்டர்பிரைசஸ் நிறுவனம் மற்றும் அசிம் பிரேம்ஜி அறக்கட்டளை ஆகியவை இணைந்து ரூ.1,125 கோடி நிதியுதவி வழங்குகிறது.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை