புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை தினமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டில் கடந்த 7ந்தேதி ஒரே நாளில் 62,538 பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு இருந்தன. கடந்த 8ந்தேதி இந்த எண்ணிக்கை 61,537 ஆக இருந்தது. நேற்று 64,399 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர்.
இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், நாட்டில் கொரோனா பாதிப்புகளுக்கு கடந்த 24 மணிநேரத்தில் 62,064 பேர் பாதிப்படைந்து உள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 22 லட்சத்து 15 ஆயிரத்து 75 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்புகளுக்கு இதுவரை 6 லட்சத்து 34 ஆயிரத்து 945 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 15 லட்சத்து 35 ஆயிரத்து 744 பேர் குணமடைந்து சென்றுள்ளனர். ஒரே நாளில் 1,007 பேர் பலியாகி உள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 44,386 ஆக உயர்வடைந்து உள்ளது என்று தெரிவித்து உள்ளது.