தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா மீட்பு விகிதம் 76.30 சதவீதமாக உயர்வு: மத்திய சுகாதாரத் துறை

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் விகிதம் 76.30 சதவீதமாக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கையை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் விகிதம் 76.30 சதவீதமாக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது:-

இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 32,34,475 பேரில் 24,67,758 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் ஒரேநாளில் 63,173 பேர் குணமடைந்தனர். இதையடுத்து கொரோனா மீட்பு விகிதம் 76.30 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதேபோன்று, கொரோனாவால் பலியானோர் விகிதம் 1.84 சதவிகிதமாக குறைந்துள்ளது.

மேலும் இன்றைய நிலவரப்படி, சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 7,07,267 ஆக உள்ளது. சிகிச்சை பெற்று வருவோரைவிட குணமடைந்தோர் எண்ணிக்கை 17,60,489 அதிகமாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு