மும்பை,
இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றால் மராட்டிய மாநிலத்தில் அதிகம் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. அந்த மாநிலத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மாதம் 14-ந் தேதி முதல் கடும் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் வெளியே வர உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேபோல ஆட்டோ, டாக்சிகளிலும் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் 50 சதவீதம் மட்டும் பயணிகள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படும் முன்ப பாதிக்கப்படும் ஆட்டோ டிரைவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தெரிவித்து இருந்தார்.
இந்தநிலையில் கொரோனா கட்டுப்பாடுகளால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 7.2 லட்சம் ஆட்டோ டிரைவர்களுக்கு தலா ரூ.1,500 வழங்க மாநில அரசு முடிவு செய்து உள்ளது. இதற்காக ரூ.108 கோடியை மாநில அரசு ஒதுக்கி உள்ளதாக அதிகாரி ஒருவர் கூறினார். மேலும் இது குறித்து அவர் கூறுகையில், ரூ.1,500 நிவாரண தொகை நேரடியாக ஆட்டோ டிரைவர்களின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்கப்படும்.
இதற்கு தகுதியான டிரைவர்கள் அவர்களின் பெர்மிட், பேட்ஜ், ஆட்டோ மற்றும் ஆதார் விவரங்களை சமர்பிக்க வேண்டும் என்றா.