தேசிய செய்திகள்

கொரோனா உயர்வு; மேற்கு வங்காள தேர்தலை ஒன்றாக நடத்தும் திட்டம் இல்லை: தேர்தல் ஆணையம் விளக்கம்

கொரோனா உயர்வால் மேற்கு வங்காளத்தில் 8 கட்ட தேர்தலில் மீதமுள்ள தேர்தல்களை ஒன்றாக நடத்தும் திட்டம் இல்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

மேற்கு வங்காள சட்டசபைக்கான தேர்தல் 8 கட்டங்களாக அறிவிக்கப்பட்டு இதுவரை 4 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. வருகிற சனிக்கிழமை 5வது கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் 45 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தலில் 39 பெண்கள் உள்பட 319 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

தேர்தல் ஜல்பைகுரி, கலிம்போங், டார்ஜிலிங், நாடியா, வடக்கு 24 பர்கானாஸ் மற்றும் புர்பா வர்தமான் ஆகிய 6 மாவட்டங்களில் நடக்கிறது. மேற்கு வங்காளத்தில் 5வது கட்ட தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் முடிவடைந்தது.

கொரோனா பாதிப்பு உயர்வால் மேற்கு வங்காளத்தில் மீதமுள்ள தேர்தல்களை ஒன்றாக நடத்த கூடும் என கூறப்பட்டது. ஆனால், 8 கட்ட தேர்தலில் மீதமுள்ள தேர்தல்களை ஒன்றாக நடத்தும் திட்டம் எதுவும் இல்லை என தேர்தல் ஆணையம் இன்று விளக்கம் அளித்து உள்ளது.

இந்த சூழலில், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பற்றி ஆலோசனை மேற்கொள்வதற்காக அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி, மேற்கு வங்காள தலைமை தேர்தல் அலுவலகம் அனைத்து அரசியல் கட்சிகளுக்கு அழைப்பும் விடுத்து உள்ளது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு