தேசிய செய்திகள்

கொரோனா பரவல் எதிரொலி: ரஷியாவில் இந்திய விண்வெளி வீரர்களுக்கான பயிற்சி நிறுத்தம்

கொரோனா பரவல் காரணமாக ரஷியாவில் இந்திய விண்வெளி வீரர்களுக்கான பயிற்சி நிறுத்தப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவதற்காக ககன்யான் என்ற திட்டத்தை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (ஐ.எஸ்.ஆர்.ஓ) செயல்படுத்தி வருகிறது.

அதற்காக இந்திய விண்வெளி வீரர்கள் 4 பேர், ரஷியாவில் உள்ள யூரி ககாரின் என்ற பயிற்சி மையத்தில் கடந்த பிப்ரவரி மாதம் பயிற்சியை தொடங்கினார்கள். 16 மாதங்கள் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட இருந்தது. தற்போது கொரோனா பரவல் காரணமாக அந்த பயிற்சி நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.

மேற்கண்ட தகவலை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய தலைவர் கே.சிவன் தெரிவித்து இருக்கிறார். மேலும் அவர் கூறும்போது, கொரோனா தடுப்பு பணிகளுக்காக வெண்டிலேட்டர்கள், கிருமிநாசினி பொருட்களை, இஸ்ரோ உற்பத்தி செய்து வருவதாகவும் தெரிவித்தார்.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை