தேசிய செய்திகள்

ஜார்கண்ட் மாநிலத்தில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.100 குறைப்பு

ஜார்கண்ட் மாநிலத்தில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.100 குறைப்பு.

தினத்தந்தி

ராஞ்சி,

நாட்டின் பிற மாநிலங்களைப் போல ஜார்கண்டிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அங்கு நேற்று முன்தினம் வரை மொத்தம் 4 லட்சத்து 12 ஆயிரத்து 939 பேர் தொற்றுக்கு உள்ளாகி இருக்கின்றனர். இந்நிலையில், கொரோனா பாதிப்பை கண்டறிவதற்கான ஆர்.டி.பி.சி.ஆர்., ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனை கட்டணங்களில் தலா ரூ.100-ஐ மாநில அரசு குறைத்துள்ளது.

இதனால் ஜார்கண்டில் இனிமேல் ஆர்.டி.பி.சி.ஆர். சோதனை கட்டணம் ரூ.300 ஆகவும், ரேபிட் ஆன்டிஜென் சோதனை கட்டணம் ரூ.50 ஆகவும் இருக்கும். பரிசோதனை பொருட்களின் விலை குறைந்ததால் இந்த கட்டண குறைப்பு செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அருண்குமார் சிங் தெரிவித்தார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து