தேசிய செய்திகள்

கொரோனா பரிசோதனை முறைகள் - மத்திய அரசு விளக்கம்

கொரோனா பரிசோதனை முறைகள் குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிவதற்கு ஆர்.டி.பி.சி.ஆர். மற்றும் ஆர்.ஏ.டி. என்னும் துரித பரிசோதனை முறைகள் பின்பற்றப்படுகின்றன. ஆர்.டி.பி.சி.ஆர். முறைதான் நம்பகமானதாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் மத்திய அரசு இந்த சோதனைகள் தொடர்பாக நேற்று திடீரென விளக்கம் அளித்தது. இதையொட்டி இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைவர் பலராம் பார்கவா கூறியதாவது:-

தொற்று வெளிப்பட்ட முதல் நாளில் எந்தவொரு சோதனையிலும் கொரோனா நெகட்டிவ் என்றுதான் வரும். வைரஸ் உங்கள் உடலுக்குள் வளர காலம் எடுக்கும். இது மறைந்திருக்கும் காலம் என்று அழைக்கப்படுகிறது.

துரித பரிசோதனை முறையில் தொற்று பாதிப்பு 3-வது நாளில் இருந்து எட்டாவது நாள் வரையில் தெரியும். ஆனால் ஆர்.டி.பி.சி.ஆர். சோதனையில் தொற்று வெளிப்பட்ட 20 நாள் வரையில் தொற்றைக் கண்டறிய முடியும்.

எனவேதான் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யவும், தனிமைப்படுத்தவும் 7 நாட்கள் கொள்கை பின்பற்றப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்