தேசிய செய்திகள்

மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 244 காவலர்களுக்கு கொரோனா

மராட்டிய மாநிலத்தில் மேலும் 244 காவலர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

மும்பை,

நாட்டிலேயே கொரோனா தொற்று பாதிப்பு மராட்டியத்தில் தான் அதிக அளவு காணப்படுகிறது. கொரோனா தொற்றுக்கு எதிராக களத்தில் முன்னின்று பணியாற்றும் காவல்துறையினரும் மராட்டியத்தில் அதிக அளவில் தொற்று பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில், மராட்டிய மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 244 போலீசாருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் மராட்டிய காவல்துறையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,216 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக இன்று மேலும் 4 காவலர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 184 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் இதுவரை 14,456 காவலர்கள் கொரோனா நோய்தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது வரை 3,576 காவலர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு