லக்னோ,
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வரும் நிலையில், உத்தர பிரதேச மாநிலத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
அந்த வகையில் இன்று உத்தர பிரதேச மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 31,165 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,99,294 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 357 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் உத்தர பிரதேச மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14,151 ஆக உயர்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது 2,62,474 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக உத்தர பிரதேச மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.