தேசிய செய்திகள்

உ.பி. எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா; மத்திய மந்திரி சஞ்சீவ் பல்யான் தனிமைப்படுத்தி கொண்டார்

உ.பி. எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா உறுதியானதால் மத்திய மந்திரி சஞ்சீவ் பல்யான் தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.

தினத்தந்தி

முசாபர்நகர்,

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. உத்தரபிரதேசத்திலும் அதன் பாதிப்பு அதிகரித்து உள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் காசியாபாத் தொகுதி எம்.எல்.ஏ. கார்க். இவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று முன்தினம் உறுதியானது. இதனையடுத்து அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை மந்திரி சஞ்சீவ் பல்யான். கடந்த சில தினங்களுக்கு முன்பு காசியாபாத் சென்ற இவர், எம்.எல்.ஏ. கார்க் வீட்டில் மதிய உணவு சாப்பிட்டதாக தெரிகிறது. தற்போது எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா தொற்று இருப்பதால், மத்திய மந்திரி தன்னை தனிமைப்படுத்தி கொண்டார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து