தேசிய செய்திகள்

மனைவி, மகளுக்கு கொரோனா: அகிலேஷ் யாதவ் தனிமைப்படுத்திக் கொண்டார்

மனைவி, மகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அகிலேஷ் யாதவ் தனிமைப்படுத்திக் கொண்டார்.

தினத்தந்தி

லக்னோ,

உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரியும், சமாஜ்வாடி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவிற்கும், மகள் டீனாவிற்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெறுகிறார்கள்.

இதை அகிலேஷ் யாதவ் டுவிட்டர் பதிவில் வெளியிட்டு உள்ளார். அந்த பதிவில் எனது குடும்ப உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதால் என்னால் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. என்று கூறி உள்ளார். இதையடுத்து அகிலேஷ் யாதவும் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு உள்ளார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்