புதுடெல்லி,
கொரோனா சிகிச்சை தொடர்பாக, லோக்கல் சர்க்கிள்ஸ் என்ற சமூக ஊடக அமைப்பு கருத்து கணிப்பு நடத்தியது. 5 கேள்விகள் கேட்கப்பட்டன. அவற்றுக்கு சுமார் 40 ஆயிரம்பேர் பதில் அளித்தனர்.
அவற்றில், கொரோனா வந்தால் அரசு ஆஸ்பத்திரிக்கு செல்வோம் என்று 22 சதவீதம்பேரும், தனியார் ஆஸ்பத்திரிக்கு செல்வோம் என்று 32 சதவீதம்பேரும், வீட்டிலேயே சிகிச்சை பெறுவதை விரும்புகிறோம் என்று 32 சதவீதம்பேரும் கருத்து தெரிவித்தனர். அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றால், வேறு ஏதேனும் தொற்று ஏற்படும் என்று 46 சதவீதம்பேர் அச்சம் தெரிவித்தனர். 57 சதவீதம்பேர், தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக கவலை தெரிவித்தனர். சிகிச்சை கட்டணங்களுக்கு அரசு உச்சவரம்பு கொண்டுவர வேண்டும் என்று அவர்கள் கூறினர்.