தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பூசி மையங்கள் இரவு 10 மணிவரை இயங்கலாம் - மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்

கொரோனா தடுப்பூசி மையங்கள் தினமும் இரவு 10 மணிவரை இயங்கலாம் என்று மாநிலங்களுக்கு மத்திய அரசு கூறியுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

கொரோனா தடுப்பூசி மையங்கள் தினமும் இரவு 10 மணிவரை இயங்கலாம் என்று மாநிலங்களுக்கு மத்திய அரசு கூறியுள்ளது.

அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் மனோகர் அக்னானி நேற்று ஒரு கடிதம் எழுதினார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கொரோனா தடுப்பூசி மையங்கள் தினமும் காலை 8 மணி முதல் இரவு 8 மணிவரைதான் இயங்க வேண்டும் என்ற ஒரு கருத்து பரவி வருகிறது. ஆனால், இதுபோன்று எந்த நேர கட்டுப்பாடும் நிர்ணயிக்கப்படவில்லை.

தடுப்பூசி மையம் செயல்படும் நேரம், அங்குள்ள தேவையை பொறுத்தது ஆகும். தேவை அதிகமாக இருந்தால், கூடுதலாக குழுக்களை ஏற்பாடு செய்து தடுப்பூசி போடலாம்.

தடுப்பூசி மையம் செயல்படும் நேரம் மாற்றி அமைக்கக்கூடியதுதான். போதிய ஊழியர்களும், கட்டமைப்பு வசதிகளும் இருந்தால், தடுப்பூசி மையம் இரவு 10 மணி வரை செயல்படலாம்.

நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், தடுப்பூசி மையங்களில் கொரோனா கட்டுப்பாடுகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். வரிசையிலும், காத்திருப்பு பகுதியிலும் இந்த கட்டுப்பாடுகள் அமல்படுத்த வேண்டும். தடுப்பூசி திட்டத்தில் புதிய மைல்கல்களை எட்டுவதில் மாநிலங்களுக்கு மத்திய அரசு உதவியாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்