தேசிய செய்திகள்

பல நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி உதவி; இந்தியாவுக்கு அமெரிக்கா பாராட்டு

கொரோனா தடுப்பூசி மருந்துகளை பல நாடுகளுக்கு வழங்கி இந்தியா உதவி செய்து வருவதற்கு அமெரிக்கா பாராட்டு தெரிவித்து உள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த 16-ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதேநேரம் அண்டை நாடுகளுக்கும் இந்தியா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்து வருகிறது. இதில் பல நாடுகளுக்கு நன்கொடையாகவும், மானியமாகவும் அளித்து வருகிறது.

அந்தவகையில் பூட்டான், மாலத்தீவுகள், நேபாளம், வங்காளதேசம், மொரீசியஸ், மியான்மர், செசல்ஸ் ஆகிய நாடுகளுக்கு மானியமாக ஏற்றுமதி செய்துள்ள இந்தியா, சவுதி அரேபியா, தென்ஆப்பிரிக்கா, பிரேசில், மொராக்கோ போன்ற நாடுகளுக்கு விரைவில் வர்த்தக ரீதியாகவும் ஏற்றுமதி செய்ய உள்ளது. இந்தியாவின் இந்த மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா பாராட்டு தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறையின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிரிவு தனது டுவிட்டர் தளத்தில், தெற்கு ஆசிய நாடுகளுக்கு லட்சக்கணக்கான டோஸ் தடுப்பூசிகளை வழங்கி, உலக சுகாதாரத்தில் பங்காற்றி வரும் இந்தியாவை நாங்கள் பாராட்டுகிறோம். ஓர் உண்மையான நண்பனாக, சர்வதேச சமூகத்துக்கு தனது மருத்துவ துறையை இந்தியா பயன்படுத்துகிறது என்று குறிப்பிட்டு உள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்