புதுடெல்லி,
நாட்டில் கொரோனா பாதிப்புகளை தடுக்கும் நோக்கில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. கடந்த ஜனவரியில் நாடு முழுவதும் இந்த பணியானது தொடங்கி நடந்து வருகிறது. முதலில் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதன்படி இன்று காலை வரையில், 1,42,42,547 கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன.
இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சக செயலாளர் ராஜேஷ் பூஷண் இன்று செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, 77% சுகாதார நல பணியாளர்கள் முதல் டோசும், 70% சுகாதார நல பணியாளர்கள் இரண்டாவது டோசும் பெற்றுள்ளனர்.
நாட்டில் கொரோனா தடுப்பு மருந்துகள் தனியார் மருத்துவமனையில் ரூ.250 விலையில் வழங்கப்படும். இவற்றில் ரூ.100 சேவை கட்டணத்திற்காக வசூலிக்கப்படும். ஆனால், அரசு மருத்துவமனையில் விலையின்றி இலவச அடிப்படையில் கொரோனா தடுப்பு மருந்துகள் கிடைக்கும் என கூறியுள்ளார்.