கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பூசி காலாவதியாகாமல் உரிய காலத்திற்குள் செலுத்த வேண்டும் - மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

கொரோனா தடுப்பூசிகளை காலாவதியாகாமல் உரிய காலத்திற்குள் செலுத்துவதை உறுதி செய்யுமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

மாநிலங்களிடம் கையிருப்பில் உள்ள கொரோனா தடுப்பூசிகளை காலாவதியாகாமல் உரிய காலத்திற்குள் செலுத்துவதை உறுதி செய்யுமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. தகுதி வாய்ந்த அனைவருக்கும் அரசு தடுப்பூசி மையங்களில் இலவச முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தும் 75 நாட்கள் கொரோனா தடுப்பூசி பெருவிழா இன்று தொடங்குகிறது.

தகுதி வாய்ந்த அனைவரும் முன்னெச்சரிக்கை தடுப்பூசி தவணை செலுத்திக் கொள்வதை அதிகரிக்கும் நோக்கில் இந்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் அனைத்து மாநில, யூனியன் பிரேதசங்களின் சுகாதாரத்துறை செயலாளர்கள் மற்றும் தேசிய சுகாதாரத்துறை இயக்கத்தின் நிர்வாக இயக்குனர்களுடன் காணொலி வாயிலாக கலந்துரையாடினார்.

அப்போது முன்னெச்சரிக்கை தவணை செலுத்திக்கொள்வதன் மூலம் தகுதி வாய்ந்த அனைவருக்கும் முழுமையாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரமாக மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை