தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 236 ஆக உயர்வு

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 236 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

உலக அளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,44,979 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரசால் ஒன்பது ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதில் அதிகபட்சமாக இத்தாலியில் 4000 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் மராட்டியம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தான் கொரோனா பாதிப்பு தீவிரமாக உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 223 ஆக இருந்தது. இதில் 191 இந்தியர்களும், வெளிநாட்டவர் 32 பேரும் அடங்குவர். இந்தியாவில் கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 236 ஆக உயர்ந்துள்ளதாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் பலியான 5 பேரும் 64 வயதைக் கடந்தவர்கள் என மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் பெரும்பாலும் வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு வந்தவர்களே கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை