தேசிய செய்திகள்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: மேற்கு வங்காள சட்டசபை காலவரையின்றி ஒத்திவைப்பு

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலியாக, மேற்கு வங்காள சட்டசபை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

தினத்தந்தி

கொல்கத்தா,

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, மேற்கு வங்காள சட்டசபை கூட்டம் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது.

மேலும், ஆங்கிலேயர் ஆட்சிக்கால சட்டமான தொற்று வியாதி தடுப்பு சட்டம் அமல்படுத்தப்பட்டது. இதன்படி, கொரோனா அறிகுறி உள்ள எவரையும் பரிசோதனை முடிவுகள் வெளியாகும்வரை தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களில் அடைத்து வைக்க அரசு அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது. இதை மீறுபவர்களுக்கு 6 மாத ஜெயில் தண்டனை விதிக்கப்படும்.

சினிமா தியேட்டர்கள், கலையரங்குகள், மிருகக்காட்சி சாலைகள் ஆகியவை மூடப்பட்டுள்ளன. போர்க்கால அடிப்படையில் நோய் ஒழிப்பு பணியில் ஈடுபட ரூ.200 கோடி சிறப்பு நிதியத்தை முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்