தேசிய செய்திகள்

கேரளாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: இன்று மேலும் 7,201 பேருக்கு பாதிப்பு உறுதி

கேரளாவில் புதிதாக இன்று மேலும் 7,201 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

திருவனந்தபுரம்,

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்துள்ளது. ஆனால் டெல்லி, கேரளா மாநிலங்களில் கொரோனா தொற்று தற்போது சற்று அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் கேரளாவில் இன்று புதிதாக 7,201 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில்இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4,80,770 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் மேலும் 28 பேர் உயிரிழந்துள்ளதால், மொத்த பலியானோர் எண்ணிக்கை 1,668 ஆக உயர்ந்துள்ளது.

கேரளாவில் இன்று ஒரே நாளில் 7,120 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,95,624 ஆக உயர்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது வரை 83,261 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு