தேசிய செய்திகள்

பிரிட்டன், கனடாவில் இருந்து மத்திய பிரதேசம் வந்த இருவருக்கு கொரோனா பாதிப்பு

பிரிட்டன், கனடாவில் இருந்து மத்திய பிரதேசம் வந்த இருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தினத்தந்தி

போபால்,

தென் ஆப்பிரிக்காவில் கடந்த நவம்பர் இறுதியில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் பாதிப்பு 38க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது. இதனால், தென் ஆப்பிரிக்காவுடனான விமான போக்குவரத்துக்கு பல நாட்டு அரசுகளும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

எனினும், இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு பரவி வருகிறது. இதுவரை 23 பேருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது. இந்த நிலையில், பிரிட்டன் மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இருந்து மத்திய பிரதேசம் வந்த இருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது என போபால் மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

அவர்களுடைய மரபணு மாதிரி பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு