அகமதாபாத்,
குஜராத்தில் முன்னாள் முதல் மந்திரியாக இருந்தவர் சங்கர்சிங் வகேலா (வயது 80). இவர், 4 முறை மக்களவை எம்.பி.யாகவும் மற்றும் மாநிலங்களவை எம்.பி.யாக ஒரு முறையும் இருந்துள்ளார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அமைச்சரவையில் ஜவுளி துறை மந்திரியாகவும் பதவி வகித்துள்ளார்.
இந்நிலையில், இவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவருக்கு லேசான அறிகுறிகள் தென்படுகின்றன. இதனால் அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். அவரை மருத்துவமனையில் சேர்ப்பது அல்லது வீட்டிலேயே தங்க செய்து சிகிச்சையை தொடருவது என்பது பற்றி நாளை முடிவு செய்யப்பட உள்ளது.