தேசிய செய்திகள்

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,580- பேருக்கு கொரோனா

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,580- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

திருவனந்தபுரம்,

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,580- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் மேலும் 314- பேர் உயிரிழந்துள்ளனர். கேரளாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 50 லட்சத்து 01 ஆயிரத்து 835- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 33,048- ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவில் இருந்து மேலும் 7,085- பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 48 லட்சத்து 94 ஆயிரத்து 435- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 73,733- ஆக உள்ளது. கொரோனா தொற்றை கண்டறிய கடந்த 24 மணி நேரத்தில் 62,219- மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் தொற்று பாதிப்பு விகிதம் 10.57- சதவிகிதமாக உள்ளது.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை