தேசிய செய்திகள்

மும்பை தாராவியில் மேலும் 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மும்பை தாராவியில் மேலும் 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

மும்பை,

இந்தியாவில் மராட்டிய மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போதைய நிலவரப்படி மராட்டியத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 52 ஆயிரத்தை கடந்துள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான தாராவியில் கொரோனா நோய் தொற்று வேகமாக பரவி வருகிறது.

இந்நிலையில் தாராவியில் இன்று ஒரே நாளில் 42 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் தாராவியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,583 ஆக உயர்ந்து உள்ளது. அங்கு கொரோனா தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 59 ஆக உள்ளது.

மராட்டிய மாநிலத்தில் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 52,667 ஆக உயர்ந்து உள்ளது. அங்கு கொரோனா பாதிப்பால் இதுவரை 1,695 பேர் உயிரிழந்துள்ளனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்