தேசிய செய்திகள்

கர்நாடகாவில் மேலும் 947 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: அம்மாநில சுகாதாரத் துறை தகவல்

கர்நாடகாவில் மேலும் 947 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

பெங்களூரு,

சீனாவில் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் மராட்டியத்தில் தான் கொரோனா வைரஸ் ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது.

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பரவல் முதலில் குறைவாகவே இருந்தது. ஆனால் தற்போது ஒவ்வொரு நாளும் பாதித்தோரின் எண்ணிக்கையும், வைரஸ் தொற்றால் பலியாவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், இன்று கர்நாடகாவில் மேலும் 947 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 15,242 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு இன்று மேலும் 20 பேர் உயிரிழந்ததால், பலியானோர் எண்ணிக்கை 246 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 7,918 பேர் குணமடைந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்