தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 62 ஆக உயர்வு

இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 62 ஆக உயர்ந்து உள்ளது.

புதுடெல்லி,

நாடு முழுவதும் மக்களிடையே கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. கடந்த மார்ச் 24ந்தேதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அன்று நள்ளிரவு முதல் வரும் 14ந்தேதி வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும். இதனால் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் பாதிப்பு ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 56ல் இருந்து 62 ஆக உயர்ந்து உள்ளது. நாட்டில் கொரோனா பாதித்தோரில் அதிக எண்ணிக்கையுடன் மராட்டியம் முதல் இடத்திலும், தமிழகம் 2வது இடத்திலும், கேரளா 3வது இடத்திலும் உள்ளன.

இதேபோன்று பாதித்தோர் எண்ணிக்கை 2,301ல் இருந்து 2,547 ஆக அதிகரித்து உள்ளது. இதுவரை சிகிச்சை பெற்றோரில் வீடு திரும்பியோர் எண்ணிக்கை 157ல் இருந்து 163 ஆக உயர்ந்து உள்ளது.