பெங்களூரு,
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா உள்பட கர்நாடகத்தில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டு இருக்கும் கைதிகளை சந்திக்க அனுமதி கிடையாது என்று சிறை நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதற்கிடையில், பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ள சசிகலா ஜாமீனில் வெளியே வர இருப்பதாக தகவல் வெளியானது. இதனை பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறைத்துறை அதிகாரி மறுத்துள்ளார். கொரோனா வைரஸ் பீதியால் சசிகலா உள்பட எந்த ஒரு தண்டனை கைதியையும் ஜாமீனில் விடுவிக்க முடிவு எடுக்கவில்லை, அது தொடர்பாக வரும் தகவல்கள் உண்மை அல்ல என்று அவர் தெரிவித்துள்ளார்.