புதுடெல்லி,
ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரம், இங்கிலாந்து செல்ல அனுமதி கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதி அளிக்க கூடாது என்று கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
ஆனால், அமலாக்கத்துறையின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம் செப்டம்பர் 20 முதல் 30 ஆம் தேதி வரை கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதி அளித்து உத்தரவிட்டது.